என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "கார் கவிழ்ந்து"
பரமத்திவேலூர்:
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே உள்ள கோடங்கிபட்டியைச் சேர்ந்தவர் சுரேஷ் (வயது 47), சிவசாமி மகன் அழகுராஜா (31), கோவிந்தராஜ் மகன் கணேசன் (30), அம்சகொடி(50), ஜெயபாண்டியன்(42), அழகு ராஜா மனைவி சுகன்யா(25), கார் டிரைவர் சிலம்பரசன்(32) உட்பட 7 பேர்கள் கோடங்கிபட்டியில் இருந்து நேற்று காரில் பெங்களூர் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.
கரூரில் இருந்து நாமக்கல் செல்லும் பை- பாஸ் சாலையில் கீரம்பூர் அருகே கார் சென்றபோது சாலையின் குறுக்கே திடீரென ஒரு வாகனம் வந்தது. அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் இடது பக்கத்தில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் காரில் வந்த சுகன்யா மற்றும் ஜெயபாண்டியன் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பரமத்தி போலீசார், உயிரிழந்த சுகன்யா மற்றும் ஜெயபாண்டியன் ஆகியோரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும் படுகாயம் அடைந்த சுரேஷ், அழகுராஜா, கணேசன், அம்சகொடி மற்றும் கார் டிரைவர் சிலம்பரசன் ஆகிய 5 பேர்களையும் காப்பாற்றி நாமக்கல்லில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்து பரமத்தி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கவுந்தப்பாடி ரோடு பகுதியில் கார் ஒன்று பெண்ணின் மீது மோதிவிட்டு தலைகீழாக கவிழ்ந்து கிடப்பதாக தெரிவித்தனர்.
- கார் மோதி விபத்தில் அடிபட்டு படுகாயம் அடைந்த பெண் பெருந்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
பெருந்துறை:
பெருந்துறையை அடுத்துள்ள காஞ்சி க்கோயில் மூலக்கடை அரியான் காடு பகுதியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவருக்கும் இவரது கூட்டாளிகள் 4 பேருக்கும் அதே பகுதியில் 5 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இந்த நிலத்தில் இவர்கள் கரும்பு பயிர் செய்து வந்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று மாலை தோட்டத்தின் மேல் செல்லும் மின்கம்பி காற்றினால் உராய்வு ஏற்பட்டு தீப்பொறிகள் கரும்பு பயிரின் மீது விழுந்துள்ளது.
இதனால் கரும்பு தோட்டத்தில் ஒரு பகுதியில் தீ பற்றியது. உடனடியாக அக்கம் பக்கத்தினர் பெருந்துறை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர். நிலைய அலுவலர் நவீந்திரன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்து கொண்டிருந்தனர்.
அப்போது அங்கிருந்த ஒரு சிலர் ஓடிவந்து நிலைய அலுவலர் நவீந்திரனிடம் கவுந்தப்பாடி ரோடு பகுதியில் கார் ஒன்று பெண்ணின் மீது மோதிவிட்டு தலைகீழாக கவிழ்ந்து கிடப்பதாக தெரிவித்தனர். மேலும் அவர்களை உயிரை காப்பாற்றும் படி கேட்டுக்கொண்டனர்.
உடனடியாக தீயணைப்பு வீரர்கள் விபத்து ஏற்பட்ட இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது கவிழ்ந்து கிடந்த காரிலிருந்து அனைவரையும் சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கார் மோதி விபத்தில் அடிபட்டு படுகாயம் அடைந்த எடப்பாடி, சித்தூர் பகுதியை சேர்ந்த காவிரி என்பவரது மனைவி சின்னம்மா (வயது 57) என்பவரை தீயணைப்பு வீரர்கள் மீட்டு தீயணைப்பு வாகனத்தி லேயே பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்து வமனைக்கு கொண்டு வந்து சேர்த்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக சின்னம்மா சேலம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இது தொடர்பாக தகவல் அறிந்த காஞ்சிக்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்